தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் புகழ்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மிகப்பெரிய இடத்தை தேடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து வெள்ளி திரையிலும் நடிக்க தொடங்கிய இவருக்கு 1947 என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
தற்போது ஜூ கீப்பர் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். கடந்த வருடம் தனது காதலியை கரம் பிடித்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்து வந்தார். சமீபத்தில் சீமந்தமும் நடந்து முடிந்த நிலையில் தற்போது அவரது மனைவி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த விஷயம் தெரிய வர ரசிகர்கள் பலரும் புகழுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.