Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசை, விஜய் டிவி டி டி ஓபன் டாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பாப்புலரான இவர் தற்போது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது பள்ளி பருவ நண்பரை காதல் திருமணம் செய்து கொண்ட டிடி சில மாதங்களிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த நிலையில் தற்போது youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரித்திக் ரோஷன் மீது காதல் இருப்பதாகவும் அவர் ஓகே சொன்னால் திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹிருத்திக் ரோஷன் சூன்சன் கான் என்பவரை திருமணம் செய்து 2014ல் விவாகரத்து செய்த நிலையில் தற்போது, சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay tv DD marriage details update
Vijay tv DD marriage details update