90களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க நிறைய பிரபலங்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான நிகழ்ச்சிகளாக நடத்தி வந்தார்கள்.
இப்போதும் ரசிகர்களால் பேசப்படுகிறார்கள், அப்படி தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் டிடி. இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் எப்போதும் சிக்ஸர் அடிப்பார்.
அடுத்து அவர் எந்த நிகழ்ச்சியில் வரப்போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் டிடி இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார், அது துளியும் மேக்கப் இல்லாத புகைப்படம். அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்கள் அழகு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் இது இப்போது எடுத்த புகைப்படம் இல்லை, எப்போதோ எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.