Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி பிரபல சீரியல்.ஷாக்கான ரசிகர்கள்

vijay-tv-ending-another-famous-serial update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே சமயம் சில சீரியல்கள் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களையும் பெறுவதுண்டு.

அந்த வகையில் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாவது சீசன் தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து மற்றொரு சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

அது வேறு ஒன்றும் இல்லை பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். தனத்திற்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு வீட்டுக்குத் தெரியாமல் ஆபரேஷன் செய்யப்பட்ட நிலையில் கதிருக்கு உண்மைகள் தெரிய வருகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிந்ததும் அப்படியே சீசன் 2 ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகமாவது வெற்றி பெறுமா அல்லது பாரதி கண்ணம்மா சீசன் 2 போல இழுத்து மூடப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

vijay-tv-ending-another-famous-serial update
vijay-tv-ending-another-famous-serial update