விஜய் டிவி கோபிநாத் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது விஜய் டிவி. இந்த சேனலில் நீயா நானா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத்.
பள்ளி ஆசிரியருக்கான பட்டயப் படிப்பை படித்து முடித்துள்ள கோபிநாத் தன்னுடைய நேர்த்தியான பேச்சின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். பல மேடைப் பேச்சுகளில் தன்னம்பிக்கை குறித்து பேசி வருகிறார்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்ட்ரா மாடர்ன் கெட்டப்பில் மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன சார் ஹீரோவா நடிக்க போறீங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கிழிந்த ஜீன்ஸ், டீசர்ட், தூக்கி வாரிய தலை என செம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்