Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அழகிய பெண் குழந்தைக்கு அப்பாவான விஜய் டிவி பிரபலம்

vijay tv kpy naveen wife blessed with girl baby

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நவீன். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து அவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரது இரண்டாவது திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் எங்களுக்கு குழந்தை பிறக்காது என சாபம் விட்டாங்க அது வருத்தமாக இருக்கிறது என பேசினார். இதனையடுத்து இவரது இரண்டாவது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தகவலை நவீன் சமூக வலைதள பக்கங்களில் தெரிவிக்க ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

vijay tv kpy naveen wife blessed with girl baby
vijay tv kpy naveen wife blessed with girl baby