ரியாலிட்டி ஷோக்களுக்கு என்ன பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதேசமயம் லாஜிக் இல்லாமல் நடக்கும் சில விஷயங்களை கிண்டலடிக்காமலும் விடுவதில்லை.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்றுதான் முத்தழகு. இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயின் கோவிலுக்கு செல்லும்போது ஹீரோவின் காலில் முள் குத்தி விட ஹீரோயின் அவரை தூக்கிச் செல்வது போன்ற காட்சி ஒளிபரப்பாக உள்ளது.
உலக வரலாற்றிலேயே சின்னத்திரையில் இதுதான் முதல் முறை என இந்த சம்பவத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் இன்னமும் கோபி மாட்டாமல் இருப்பது, பாரதிகண்ணம்மா சீரியல் டாக்டராக இருந்துகொண்டே பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் தேவையில்லாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பதே போன்ற விஷயங்கள் ரசிகர்களை தொடர்ந்து கிண்டல் அடிக்க வைத்து வருகின்றன.
இதெல்லாம் உங்களால மட்டும் தான்டா முடியும் என ரசிகர்கள் விஜய் டிவியை கிண்டல் அடிக்கின்றனர்.