விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சீரியல்தான் பாவம் கணேசன். மக்களின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் இதில் கதாநாயகியாக நடிகை நேஹா கவுடா நடித்து வருகிறார். கன்னடத்து நடிகையான இவர் ஸ்டார் சுவர்னா என்கிற கன்னட சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் தமிழ் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களையும் சேர்த்து கவர்ந்திருக்கும் இவர் ‘பாவம் கணேசன்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நடிகை நேஹா கவுடா பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகப் போகும் தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை நேஹா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டுக்குள் சேகரிக்க போகிறேன். திரித்து பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. அநாவசியமாக யாரிடமும் பேசமாட்டேன்’ என கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவரது பெயர் தமிழ் பிக் பாஸ் ஆறாவது சீசனுக்கான பட்டியலில் இதுவரை வரவில்லையே! என்று குழப்பத்தில் இருந்தனர்.
ஆனால் நடிகை நேஹா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியான தகவல் தான் ஆனால், அவர் தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கவில்லை, கன்னடத்தில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 9-ல் தான் அவர் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram