சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதை தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்னதாக ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே என்ற சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இதுபோன்ற சீரியல்களில் புது வரவால் மற்ற சீரியல்களில் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
செந்தூரப்பூவே சீரியல் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியல் இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை மதிய வேளையில் இருந்து மாலை வேளைக்கு மாற்றினால் நன்றாக இருக்கும் இரவு நேரத்தில் வேண்டாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.