தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இருந்து வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சி சேனலுக்கும் இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிலவி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதை போல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்னதாக இரண்டு சேனல்களும் சீனியர்களுக்கான நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தது.
தற்போது இரண்டு சேனலிலும் ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் தொடங்க அதனை தொடர்ந்து ஓரிரு வாரத்திலேயே ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 9 தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. சரிகமப நிகழ்ச்சியில் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் டெடிகேஷன் ரவுண்ட் நடந்து முடிந்தது, இதனால் சரிகமபவை சூப்பர் சிங்கர் காப்பி அடித்து வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.