Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் குறித்து பேசி விஜய் வர்மா..வைரலாகும் தகவல்

vijay-varma-speech-goes-viral update

“அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொண்டுள்ளார்.

பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தற்போதைய பிக்பாஸ் சீசனில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா பேசியதாவது, நட்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று பேசினார்.”,

vijay-varma-speech-goes-viral update
vijay-varma-speech-goes-viral update