Tamilstar
News Tamil News

முதல்முறையாக தளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்பவர். இவர் இயக்கத்தில் வெளியான அணைத்து திரைப்படங்களுமே வெற்றியடைந்துள்ளது.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அதனை நடிகர் சூர்யாவின் வாடிவாசல் மற்றும் நடிகர் சூரியுடன் ஒரு படமும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அதற்குமுன் மீண்டும் நடிகர் தனுஷ் உடன் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது நீண்ட கூறப்பட்டு வந்த தளபதி விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதுஎன்னவென்றால் “வாடிவாசல் திரைப்படம் முடிந்ததும் நடிகர் விஜய் எப்போது அழைத்தாலும் அந்த ப்ராஜெக்ட்டுக்கு சென்று விடுவேன்” என வெற்றிமாறன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.