விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார். விவசாயத்தை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை அள்ளிக்குவித்தது.
2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் செல்பி புள்ள என்ற பாடலை விஜய் பாடி இருந்தார். இந்த பாடல் பட்டித்தொட்டி முழுவதும் பிரபலமானது. இந்நிலையில் செல்பி புள்ள பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.