Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கைது செய்யப்பட்ட விஜய் டிவி நாஞ்சில் விஜயன். காரணம் என்ன தெரியுமா?

vijaytv nanjil-vijayan-arrest-details

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடி செய்து வந்தவர் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன்‌

கடந்த 2020 ஆம் ஆண்டில் டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி மற்றும் வெள்ளித்திரை நடிகை வனிதா இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் வனிதாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார் நாஞ்சில் விஜயன்.

அதன் பிறகு நாஞ்சில் விஜயின் மற்றும் சூர்யா தேவி இடையே மோதல் ஏற்பட்டது. பிறகு சூர்யா தேவி வளசரவாக்க காவல் நிலையத்தில் நாஞ்சில் விஜயின் மீது புகார் அளிக்க அவர் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்தது. நாஞ்சில் விஜயன் இந்த வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் தற்போது கைது செய்யப்பட்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

vijaytv nanjil-vijayan-arrest-details
vijaytv nanjil-vijayan-arrest-details