Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை விரட்டி விட்ட விஜய் டிவி – நடந்தது என்ன??

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் முடிவடைந்துள்ளன. விரைவில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் டிக் டாக் மூலம் கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு பிரபலமான இலக்கியா இதில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி அவர் வேண்டாம் என நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் ஓவர் கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் இலக்கியா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் இன்னும் மோசமாக நடந்து கொண்டால் நமக்குத்தான் டேமேஜ் என விஜய் டிவி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.