Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் சொன்ன விக்ரம்

vikram-about-thalapathi-vijay

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தான் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள “கோப்ரா” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்திற்கான போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் நடிகர் விக்ரம் தளபதி விஜய் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அப்பேட்டியில் நடிகர் விக்ரம், எனக்கு நடிகர் விஜய் இடம் மிகவும் பிடித்தது அவருடைய அமைதி தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் விஜய் அமைதியாக இருப்பார், அவருடைய டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர் டான்ஸ் காக எந்த பயிற்சியும் எடுக்க மாட்டார் ஷூட்டிங்க்கு வருவார் அமைதியாக டான்ஸர் சொல்லிக் கொடுப்பதை பார்த்துவிட்டு அசால்டாக ஆடி முடித்துவிட்டு போய்விடுவார் என்று விஜயை குறித்து தனக்கு பிடித்த சுவாரஸ்யமான தகவலை அப்பேட்டியில் நடிகர் விக்ரம் பகிர்ந்து இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 vikram-about-thalapathi-vijay

vikram-about-thalapathi-vijay