Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் நடித்த பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

vikram movie actors salary details

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கிய இவர் அதன் பின்னர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார்.

இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாஸில் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம் வாங்க.

கமல்ஹாசன் – ரூபாய் 50 கோடி

விஜய் சேதுபதி – ரூபாய் 10 கோடி

பஹத் பாசில் – ரூபாய் 4 கோடி

லோகேஷ் கனகராஜ் – ரூபாய் 4 கோடி

அனிருத் – ரூபாய் 4 கோடி