Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் படம்

Vikram movie is a remake in Hindi

இந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து 2016-ல் திரைக்கு வந்த ‘இருமுகன்’ படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரே அதன் இந்தி பதிப்பையும் இயக்குவார் என்று தெரிகிறது. இதில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.