Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தகவல்…உற்சாகத்தில் ரசிகர்கள்

Vikram Movie Latest Update

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார். ‌‌‌‌‌

இதனை அடுத்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜூன் மூன்றாம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உட்பட பல்வேறு நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இன்று மாலை இந்த படத்தின் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.