தமிழ் சினிமாவில் திறமை மிக்க நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவர் கடந்த 8 ஆம் தேதி உடல் நலக்குறைவால்சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய விக்ரமை குறித்து இணையதளத்தில் பலவித வதந்திகள் பரவியிருந்தது. இதற்கிடையே நேற்று சென்னை பீனிக்ஸ் மாலில் நடைபெற இருந்த கோபுரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்திருந்தது.
அதேபோல் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் விதமாக நடிகர் விக்ரம் கலந்து கொண்டிருந்தார். இதில் அவருடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான், உதயநிதி ஸ்டாலின், அஜய் ஞானமுத்து, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கலந்திருந்தனர். இதில் நடிகர் விக்ரம் தனது உடல் நலம் குறித்து பேசியுள்ளார். அதாவது நம்ம “என்னென்னமோ பார்த்துட்டோம் இதெல்லாம் ஒன்றுமில்லை” என்பதால் இந்த வதந்திகளை பற்றி கவலைப்படவில்லை. எனது குடும்பம் எனது ரசிகர்கள் இருக்கும் வரை எனக்கு ஒன்றும் ஆகாது.
சிரியா அசோகரித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது இருந்தது. ஆனால் இதனை பெரிய விஷயமாக மாற்றி விட்டார்கள். இதனால் தன்னை நேசித்தவர்கள் சிலர் சங்கடங்களை சந்தித்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் நலமாக இருக்கிறேன் என்பதை காண்பிக்கத்தான் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று பல விஷயங்களை மனம் விட்டு பேசி அந்த வதந்திகளுக்கு நடிகர் விக்ரம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.