கோலிவுட் திரையுலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.
இதனை நிறைவு செய்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 170 ஆவது திரைப்படத்தில் நடிக்க கவனம் செலுத்த இருக்கிறார். இப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக தலைவர் 170 திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து விக்ரமிடம் தயாரிப்பு நிறுவனம் அணுகிய போது அவர் மறுத்து விட்டதாகவும், ஆனால் இதில் வில்லனாக நடிக்க விக்ரம் தான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் விருப்பப்படுவதால் தொடர்ந்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#Thalaivar170 Buzz – #ChiyaanVikram was Approached to do the Antagonist Role in the Film but he Refused to act as Villain for Superstar #Rajinikanth.
• But TJ.Gnanavel thinks Chiyaan will be apt for that role.. So the talks are still going on to bring @chiyaan on board.
— Cinemapatti (@cinemapatti) May 16, 2023