Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆதித்ய கரிகாலன் பேசிய வசனத்தை மழலை குரலில் பேசிய சிறுவன்.. நெகிழ்ச்சியாக விக்ரம் போட்ட வீடியோ

vikram-posted-a-video-of-the-boy-speaking-ps1

தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது . அந்த வகையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது PS1 திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்த விக்ரம் வசனங்கள் இன்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் கூறிய கல்லும், பாட்டும், போர்க்களமும், ரத்தமும் எல்லாம் அவளை மறக்கத்தான், ‘என்னை மறக்கத்தான்’ என்ற வசனத்தை ஒரு சிறுவன் மழலைக் குரலில் வேற லெவலில் பேசி அசத்தியிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து போன நடிகர் விக்ரம் அச்சிறுவனின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மழலை ஆதித்த கரிகாலன்!! பின்றியே பா!! என்று ட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.