கொரோனாவால் சூர்யாவின் சூரரைப்போற்று விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட சில படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டன.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு சிறு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களான மாஸ்டர். ஈஸ்வரன் படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாக உள்ளன.
இந்த நிலையில் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள புலிக்குத்தி பாண்டி படத்தை பொங்கல் பண்டிகையில் தியேட்டர்களுக்கு பதிலாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். ஓ.டி.டி தளத்திலும் இந்த படம் வெளியாக உள்ளது.
ஏற்கனவே பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த நாங்க ரொம்ப பிசி படமும் தீபாவளி பண்டிகையில் டி.வியில் நேரடியாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது
#PulikkuthiPandi directed by Muthaiya. A product of Sun entertainment. Looking forward! #2021 💪🙏 pic.twitter.com/sjyuUn9IsB
— Vikram Prabhu (@iamVikramPrabhu) December 30, 2020