நடிகர் விக்ரம் நடிப்பில், சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருந்த படம் ‘மகாவீர் கர்ணா’. மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இப்படத்தை இயக்கினார். மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடிக்க சென்றதால், ‘மகாவீர் கர்ணா’ கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், அந்தப் படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகியதாக கூறப்படுகிறது. அதனால் வேறு நடிகரை வைத்து ‘சூர்யபுத்ரா மகாவீர் கர்ணா’ என்ற பெயரில் இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, இப்படத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.