Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரமனை மறைமுகமாக விமர்சித்த அசீம். என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

vikraman-caught-in-the-controversy-aseem

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக பல சீரியல்களில் நடித்து அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் அசீம்.

தற்போது வெள்ளித்திரையில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அசிம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவா இருந்து அவ்வபோது சில ட்வீட்டுகளை பதிவு செய்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இவருக்கு அப்படியே எதிராக இருந்து வந்த விக்ரமன் மீது தற்போது வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றுவதற்காக குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.

இந்த நிலையில் அசீம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் 🔥

( என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும் ) என்று பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கும் விக்ரமன் குறித்து தான் இவர் இப்படி பதிவு செய்கிறாரோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

vikraman-caught-in-the-controversy-aseem
vikraman-caught-in-the-controversy-aseem