தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது பயணத்தை தொடங்கியவர் தற்போது பிஸியான நடிகராக வெள்ளித்திரையை கலக்கி வருகிறார்.
இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் தற்போது மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகரும் தளபதி விஜயின் தம்பியுமான விக்ராந்த் தான்.
விக்ராந்த் இந்த படத்தில் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.