Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவருடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போல.. விஜய் சேதுபதியை புகழும் வில்லன் நடிகர்

Villain actor praising Vijay Sethupathi

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் வில்லனாக நடித்தவர் கபீர் சிங். இப்படத்தை அடுத்து, விஜய் சேதுபதியுடன் றெக்க மற்றும் காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் என பல படங்களில் நடித்தார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது திரை வாழ்க்கை பற்றி கூறும்போது, விஜய் சேதுபதியுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மேலும் அவருடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போன்றது என்று புகழ்ந்துள்ளார்.