சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் வேறு துறை சார்ந்த பிரபலங்களை காதலித்து திருமணம் செய்வதுண்டு. அப்படியாக தற்போது பேட்மிண்டன் வீராங்கனை வர்ஷா பெலவாடி கன்னட சினிமா நடிகர் வினாயக் ஜோஷியை திருமணம் செய்யவுள்ளாராம்.
வர்ஷா சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றவர். ஓய்வு பெற்ற இவர் தற்போது பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
அதே போல நடிகர் வினாயக் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் ஹீரோவாகி, டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
நண்பரால் அறிமுகமான இவர்கள் நட்பாகி காதலாகி பின் இவர்களை தற்போது திருமண வாழ்க்கையில் இணைத்து வைக்க பெற்றோர்களால் முடிவு செய்துவிட்டார்களாம்.