Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாவீரன் படக்குழுவை பாராட்டிய தொல் திருமாவளவன்.என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க

viral-news-about-maaveeran movie

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடை திறந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்தபின் தொல்.திருமாவளவன் அவர்கள், மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் படத்தில் பல காட்சிகள் கண் கலங்க வைத்துள்ளதாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை சூழலை அரசுக்கு எடுத்து சொல்லும் வகையில் படம் அமைந்திருப்பதாகவும் கூறி மாவீரன் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இவரது இந்த பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

viral-news-about-maaveeran movie
viral-news-about-maaveeran movie