இந்தியளவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி தான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா.
ஆம் இவர்கள் இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்று டுவிட்டரில் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
இதற்கு குறிப்பாக கூறப்படும் காரணம் :
பதால் லோக் எனும் சீரிஸ் ஒன்றை நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரித்து வெளியிட்டிருந்தார்.
இந்த சீரிஸில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தனது கட்சியை தாக்கும் விதத்தில் இருக்கிறது என அந்த கட்சி எம்.எல்.ஏ, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு தேச பக்தர், ஆனால் அவரின் மனைவி இப்படிப்பட்ட ஒரு சீரிஸை தயாரித்துள்ளார். இதனால் அவர் அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்யவேண்டும் என குறிப்பிட்டு, ரசிகர்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளார்.
இதனால் தான் தற்போது இந்த விவாகரத்து சர்ச்சை பெரும் அதிர்வலையை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.