Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விருமன் பட போஸ்டரால் வந்த சிக்கல்.. ஜோதிகாவின் பெயரை சூர்யா நீக்கியதற்கு இதுதான் காரணமா?

viruman movie poster-controversy details

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை இவரது தயாரிப்பில் வெளியான படங்களை தயாரிப்பு என்ற இடத்தில் சூர்யா ஜோதிகா என இருவரின் பெயரும் இணைந்து தான் இடம்பெறும்.

ஆனால் தற்போது சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள விருமன் பட போஸ்டரில் தயாரிப்பு என்ற இடத்தில் சூர்யாவின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டு இருப்பது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

சூர்யா மற்றும் ஜோதிகா இடையே சண்டை அதன் காரணமாகவே ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் விருமன் திரைப்படம் மசாலா கலந்த படம் என்ற காரணத்தினால் ஜோதிகாவின் பெயர் நீக்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. மற்றபடி சூர்யா ஜோதிகா இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

viruman movie poster-controversy details
viruman movie poster-controversy details