Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஐதராபாத்தில் சண்டை போடும் விஷால்

Vishal 31 Resumed shoot in hyderabad

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். அங்கு சண்டைக்காட்சிகள் உள்பட படத்தின் அனைத்து காட்சிகளை ஒரே கட்டத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.