எனிமி படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்ததாக புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. நேற்று நடிகர் விஷால், மலையாள நடிகர் பாபு ராஜ் ஆகியோருக்கு இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடிகர் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பில் காயம் அடைந்த விஷால்…#Vishal31 #Vishal @VishalKOfficial pic.twitter.com/TesU6TLNVr
— Sathishwaran PRO (@SathishwaranPRO) July 21, 2021