தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக லத்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுனேனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை ஆர் வினோத் குமார் இயக்க ராணா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. புதிய மாசான போஸ்டருடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டப்பிங் பணிகள் நிறைவடைந்து விரைவில் இந்த படத்தின் டீசர், டிரைலர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.