கோலிவுட் திரை உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் இயக்குனர் ஏ வினோத்குமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி லத்தி திரைப்படம் வெளியானது. விஷாலுடன் இணைந்து நடிகை சுனைனா, பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி, லத்தி திரைப்படம் வரும் 14ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சன் நெக்ஸ்ட் நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Laththi streaming from 14th Jan only on Sun NXT#SunNXT #Laththi #LaththiCharge #Vishal #Sunaina #Prabhu #Munishkanth #MeeshaGhoshal #ThalaivasalVijay #AVinothKumar @VishalKOfficial @TheSunainaa pic.twitter.com/SyCNMWbYVw
— SUN NXT (@sunnxt) January 11, 2023