Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தில் நடிக்க மறுத்த விஷால்.. அவரே கூறிய காரணம்

Vishal refused to act in the movie Leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் நடிக்காதது குறித்து நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இயக்குனர் லோகேஷ் ‘லியோ’ படத்தில் நடிப்பதற்காக கால் ஷீட் கேட்டு வந்தார். நான்கு மாதங்கள் கால் ஷீட் கேட்டார். ஆனால், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதால் ‘லியோ’ படத்தை நிராகரித்துவிட்டேன். நான் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று பேசினார்.