Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அனுமதி கேட்க மாட்டேன் – விஷால்

vishal speech in Veerame Vaagai Soodum

விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், ‘ நான் எப்போதும் புதுமுக இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் போது, யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்று இயக்குனரிடம் சொல்லிவிடுவேன். இதற்காக யுவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன். கட்டாயமாக சொல்லிவிடுவேன். ஏன் என்றால் யுவன் எனக்கு நெருங்கிய நண்பர் ‘ என்றார்.