Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்த கட்டத்தை சென்னையில் ஆரம்பிக்கும் விஷால்

Vishal will start the next phase in Chennai

எனிமி படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்ததாக புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஐதராபாத்தில் நடிகர் விஷால், மலையாள நடிகர் பாபு ராஜ் ஆகியோருக்கு இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது நடிகர் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.