தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஷ்ணு பூர்ணிமா உடன் காதலா என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் எனக்கும் அவருக்கும் ஒரு Bonding இருந்தது.
அதனால் ஏதாவது ஃபீலிங்ஸ் இருக்கா என்று கேட்டேன் அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை ஆகையால் நானும் அதன் பிறகு அதைப் பற்றி பேசவில்லை. அவர் கேமராக்காக நிறைய விஷயங்கள் செய்த அதனால் அவரை நம்பலாமா வேண்டாமா என்று சந்தேகம் எனக்கே இருந்தது என தெரிவித்துள்ளார்.
