தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதில் போட்டியாளராக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இப்படியான நிலையில் இந்த லிஸ்டில் போராடி இடம் பிடித்துள்ளார் ஜீ தமிழ் பிரபலம் ஒருவர். ஆமாம் சத்யா சீரியல் மூலம் ஜீ தமிழில் அமுல் பேபியாக வலம் வந்த விஷ்ணு தான் அவர் என்பது தெரிய வந்துள்ளது.
பொதுவாக பழைய போட்டியாளர்கள் சிபாரிசில் சிலர் போட்டியாளர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் ரட்சிதா மற்றும் சிவின் ஆகியோரின் சிபாரிசு மூலமாக விஷ்ணு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்று இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ரட்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷூம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
