விஷ்ணு விஷால் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இது தொடர்பான தகவலை விஷ்ணு விஷால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவட்டுள்ளார். அதில், \”விஷ்ணு விஷால் 21 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. பணியில் இயக்குனர் ராம்குமார் உடன்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்,\” என்று குறிப்பிட்டுள்ளார். இம்முறை படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுகிறது. இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகலாம்.
On to the third schedule of #vv21 ..
With the master @dir_ramkumar at work …
Expect the unexpected❤️#kodaikanal#vv21 @SathyaJyothi pic.twitter.com/xQVDXDfxAT— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) February 17, 2024