தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான செய்தி. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறன். சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.