Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தலைவரின் நம்பிக்கை பிரமிக்க வைக்கிறது”:லால் சலாம் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘லால் சலாம்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் விஷ்ணு விஷால் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், “தலைவரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும். பிப்ரவரி 9-ஆம் தேதி உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.