பிரபுசாலமன் இயக்கத்தில், ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யானைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு விஷால், யானைகளை பார்த்து பயம் இல்லை. மனிதர்களைப் பார்த்துதான் பயம் என்று கூறினார்.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது யானையுடன் அன்பாக பழகும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram