Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ

vishnu-vishal latest movie-update

“ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரொடக்ஷன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்ஷன் படமாக உருவாக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விஷ்ணு விஷால் நடித்துவரும் திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்கும். தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

vishnu-vishal latest movie-update
vishnu-vishal latest movie-update