Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லால் சலாம் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட விஷ்ணு விஷால்

vishnu-vishal-speak-about-lal-salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார். \”திரைத்துறையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது.

ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.\”\”இந்த காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயம். இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறம்பட செய்து முடித்திருக்கிறார்,\” என்று தெரிவித்தார்.

vishnu-vishal-speak-about-lal-salaam
vishnu-vishal-speak-about-lal-salaam