Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று

Vishnu Vishal tests positive for Covid-19

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், புத்தாண்டு பாசிடிவ் ரிசல்ட்டுடன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பயங்கரமான உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சலும் இருக்கிறது. விரைவில் மீண்டு வருவேன் என்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிள்ளார்.