கண்பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம்.
உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கண். அந்த கண் பார்வையை மேம்படுத்த நாம் சில உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கண் பார்வையை சீராக்க நாம் ஆரஞ்சு பழம் சாப்பிடலாம் ஏனெனில் இதில் வைட்டமின் C நிறைந்திருப்பதால் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் கீரை மற்றும் கேரட் சாப்பிடுவதும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது மட்டுமில்லாமல் பாதாம் மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம்.
குறிப்பாக முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு கண் பார்வைக்கு நல்லது.எனவே ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.