தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.
அப்பா மகள் சென்டிமென்ட்டில் இப்படம் மாஸ் ஹிட் அடித்தது. மேலும் தொலைக்காட்சி சேனலில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது பிச்சைக்காரன் படம் படைத்த TRP சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது.
அதேபோல் இரண்டாவது முறை இப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பு பட்ட போதும் புதிய சாதனையைப் படைத்தது.
தற்போது மூன்றாவது முறை ஒளிபரப்பப்பட்டுள்ளது. இரண்டாவது முறை பெற்ற பார்வையாளர்களை விட தற்போது அதிகமான பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். TRP-யின் கிங் தல அஜித் தான் என்பதை இது இருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.