கடந்த ஆண்டு பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியான படம் தல அஜித்தின் விஸ்வாசம். அதே போல் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் தளபதி விஜய்யின் பிகில்.
இதில் விஸ்வாசம் படம் ரூ. 187 கோடி வரை வசூல் செய்திருந்தது. மேலும் பிகில் திரைப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் பிகில் படத்தின் வசூலை விட அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் தான் அதிகம் என கூறுகின்றனர்.
ஆம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் முழுமையாக ரூ. 300 கோடி வசூல் செய்திருந்தாலும், முதல் 7 நாட்களில் ரூ. 100 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது.
ஆனால் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் முதல் 8 நாட்களில் ரூ. 125 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இதனை வைத்து பார்க்கும் பொழுது முதல் வார வசூலில் விஸ்வாசம் வசூல் செய்து தொகையை விட குறைவாக வசூல் செய்துள்ளது விஜய்யின் பிகில் திரைப்படம்.